Thursday, December 26, 2024
HomeLatest News31வது நாளாகத் தொடரும் காலிமுகத்திடல் போராட்டம்!

31வது நாளாகத் தொடரும் காலிமுகத்திடல் போராட்டம்!

காலி முகத்திடலில் தன்னெழுச்சியாக உருவான அமைதியான மக்கள் போராட்டம் இன்று 31வது நாளாகத் தொடர்கிறது.

கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

காலவரையற்ற போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அனைத்து தரப்பு மக்களும் காலி முகத்திடலில் திரண்டு வருகின்றனர்.

மோசமான முகாமைத்துவத்தின் மூலம் நாட்டை நெருக்கடிக்குள் தள்ளிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தை பதவி விலகக் கோரி கோத்தா கோ கமவில் நடைபெற்ற போராட்டங்களுக்கு மேலதிகமாக நாட்டின் பல பாகங்களிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Recent News