கனடாவைச் சேர்ந்த புகழ் பெற்ற இளம் பாடகர் ஜஸ்டின் பிம்பர், தற்போது முகத்தில் ஏற்பட்டுள்ள பக்கவாத நோயினால் மிகவும் அவதியுறுவதாகவும், தனக்காக இறைவனிடம் மன்றாடும் படியும் காணொளி மூலம் தனது ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் காணொளி மூலமான பதிவில் ஜஸ்டின் தெரிவிக்கும் போது,
“தனது வலது பக்க முகத்தில் எந்த அசைவையும் ஏற்படுத்த முடியவில்லை என்றும், வலது பக்க கண்கள் துடிக்கும் செயற்பாட்டை இழந்துள்ளதாகவும், இத்துடன் இடது பக்க உதடுகளை மாத்திரம் அசைத்து சிரிக்கவும், கதைக்கவும் தன்னால் முடிவதாகவும், ‘ராம்சே ஹண்ட் சிம்ரம்ஸ்’ எனப்பட்ட நோயின் தாக்கமே தனக்கு ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக அடுத்துவரும் சில இசைக் கச்சேரிகளை தன்னால் மேற்கொள்ள முடியாத நிலை தோன்றியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்நோயில் இருந்து தான் விரைவில் மீண்டு வருவேன் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும், எனக்காக இறைவனிடம் மன்றாடுங்கள் ” என்றும் மேற்படி காணொளி பதிவில் தெரிவித்துள்ளார்.
பாடகர் ஜஸ்டின் வெளியிட்ட மேற்படி மூன்று நிமிட காணொளி பதிவானது இஸ்டாகிராமில் சுமார் 14 மில்லியன் மக்களை சென்றடைந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.