Tuesday, January 7, 2025
HomeLatest Newsஅமெரிக்க இராஜாங்க திணைக்களத்தில் கோட்டாபயவிற்கு எதிராக சாட்சியங்கள்! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தகவல்

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தில் கோட்டாபயவிற்கு எதிராக சாட்சியங்கள்! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தகவல்

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தில் பணிபுரிபவர்கள் பலர், கோட்டாபயவிற்கு எதிராக தங்களிடம் போதியளவு சாட்சியம் உள்ளதாக அடிக்கடி கூறி வருவதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வளங்களை சூறையாடியவர்களை அம்பலப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் வலியுறுத்தியுள்ளார்.

சிங்கள மக்களால் நிதி திரட்டப்பட்ட போது அவர் இந்த விடயத்தை தெரிவித்தார். இலங்கையில் குடும்ப ஆட்சியொன்று முன்னெடுக்கப்படுகிறது. நிதி மோசடி இடம்பெறுகிறது.

இதனை அமெரிக்காவிலுள்ள வெளிவிவகார அமைச்சின் கவனத்திற்கு கொண்டு வந்து நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

அவர் கொண்டு வரவிட்டாலும் கூட இங்குள்ள குற்றப்புலனாய்வு திணைக்களம் (FBI) இவ்வாறான குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பார்கள், அவர்கள் அதற்கான விசாரணைகளை மேற்கொண்டு வரக்கூடும், எனினும் அது எமக்கு தெரியாது.

இராஜங்க திணைக்களத்தில் பணிபுரிபவர்கள் பலர் அடிக்கடி கூறி வருகின்றார்கள், கோட்டாபயவிற்கு எதிராக தங்களிடம் போதியளவு சாட்சியம் உள்ளது என. குறிப்பாக வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்கள் தொடர்பாக என வி.உருத்திரகுமாரன் குறிப்பிட்டுள்ளார்.

Recent News