அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு பகுதிகளிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இவ்வாறான நிலையில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அவசரகால சட்டத்தை அமுல்படுத்தியுள்ளார்.
ஜனாதிபதியால் அமுல்படுத்தப்பட்ட அவசர காலச் சட்டம் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் தமது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்..
இவ்வாறான நிலையில் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க அவசர காலச் சட்டம் தொடர்பில் தமது ருவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.
அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
ஜனாதிபதி ஜி.ஆர் இலங்கைக்கு எதிராக போர் பிரகடனம் செய்தாரா?
அவசரகாலச் சட்டங்களைச் செயல்படுத்துவது என்பது போராட்டங்களை ஒடுக்க ஆயுதப் படைகளுக்கு அதிகாரங்களை வழங்குவதாகும்.
அல்லது டிஃபாக்டோ ராணுவ ஆட்சியை நிறுவுவதா?
இதை நாங்கள் கண்டிக்கிறோம் மற்றும் அதிக தைரியத்துடன் போராடுகிறோம்! என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.