Saturday, May 4, 2024
HomeLatest Newsதைவான் நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்வு..!

தைவான் நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்வு..!

தைவான் தலைநகர் தைபே நகரத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.3 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் சுமார் 32 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு உருவானது.இது 25 ஆண்டுகளுக்கு பின்னர் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஆகும். இதற்கு முன்னர் கடந்த 1999-ல் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் காரணமாக சுமார் 2400 பேர் பலியாகினர்.

இந்தநிலையில் தற்போது மீண்டும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நில அதிர்வு ஏற்பட்டது. இதனைதொடர்ந்து சுமார் 100 முறை அங்கு அதிர்வுகள் ஏற்பட்டன. எனவே மக்கள் தங்களது வீடுகளில் இருந்து வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.இதில் அங்குள்ள பல கட்டிடங்கள் சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்தன.இந்த கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை தற்போது 12 ஆக உயர்ந்துள்ளது.
இதில் 1,000-க்கும் மேற்பட்டோர் சிக்கி கொண்டனர். அவர்களில் பலர் மீட்கப்பட்ட நிலையில் 700-க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர்.தேடுதல் பணிகள் இன்னும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக தைவான் ஊடகங்கள் கருத்து வெளியிட்டுள்ளன.

Recent News