Sunday, January 12, 2025
HomeLatest Newsஅவசரகாலசட்ட பிரகடனம் தொடர்பில் விளக்கமளிக்க  வேண்டும்;மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்து.

அவசரகாலசட்ட பிரகடனம் தொடர்பில் விளக்கமளிக்க  வேண்டும்;மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்து.

நேற்று நள்ளிரவு முதல் அவசர காலச் சட்டம் அமுல்ப் படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள அவசர காலச் சட்டம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அரசாங்கம்  அவசரகால  சட்டத்தினை பிரகடனப்படுத்தியமை தொடர்பில் பொதுமக்களுக்கு விளக்கமளிக்க  வேண்டும் என  மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

அதேவேளை நாட்டில்  ஆர்ப்பாட்டங்கள் அமைதியாகவும்  பொலிஸாரினால் சாதாரண வகையில்  கட்டுப்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்படுவதாகவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு  தெரிவித்துள்ளது.

Recent News