சீன அதிபர் “சி ஜிங் பிங்” எதிர்வரும் வாரமளவில் மத்திய கிழக்கு நாடான சவுதி அரேபியாவிற்கு பயணமாகவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
தற்போதைய பசுபிக் பிராந்திய சூழல் சீனாவிற்கு மிகவும் ஆபத்து நிறைந்த சூழளாலாக மாறி வருகின்ற நிலையில் சீனா தனக்கு ஆதரவு திரட்ட வேண்டிய ஒரு கட்டாய நிலை ஏற்பட்டிருக்கின்றது.
மேலும் சீனாவின் உற்பத்திகள் மேற்கு நாடுகளில் தடைசெய்யப்பட்ட நிலை காணப்படுவதினால் சீனாவின் உற்பத்திகள் சீனாவிற்குள் தேங்கிக் கிடப்பதாகவும் இதனால் உள்ளூர் பொருளாதாரம் பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனா தனது பொருளாதாரத்தை மீண்டும் கட்டி யெழுப்பவதற்கு பல நாடுகளுடன் இணக்கம் காண வேண்டிய சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலiயில் மத்திய கிழக்கு நாடுகளின் ஆதரவினையும், பொருளாதார நட்புறவுகளையும் ஏற்படுத்தும் நோக்கில் சீன அதிபரின் சவுதிக்கான பயணம் அமையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.