சீனாவில் கடந்த ஜீலை முதல் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில் வேலை வாய்ப்பின்மையும் அதிகரித்துள்ளது. இதன் விளைவாக இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குள்ளாகியுள்ளதுடன் வேலையின்மை தொடர்பான விபரங்களை வெளிபிடுவதை சீனா அரசும் நிறுத்தியுள்ளது.
ஜீன் மாத கணிப்பின் படி 16 முதல்24 வயதுக்குட்பட்ட நகர்ப்புறத் தொழிளாலர்களி்ல் 21.3 சதவீதமானோர் கொரோனா காலகட்டத்திற்குப் பின் இன்றுவரை வேலையற்றுள்ளனர். இதேவேளை நகர்ப்புறத் தொழிலாளர்களிடையே ஒட்டுமொத்த வேலையின்யை ஜீலையில் 5.30 சதவீதமாகவுள்ளது. இது ஜீனை விட 0.10 சதவீதம் அதிகமாகும்.
இந் நிலையில் ஜனவரியில் 2.20 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி ஜீன் மாதத்துடன் முடிவடைந்த முடிவடைந்த காலாண்டில் 0.80 சதவீதமாக சரிவடைந்தது. இந் நிலையில் வேலையின்மை பிரச்சினை அதிகரித்துள்ள நிலையில்வெளிநாட்டு முதலீட்டாளர்களிடமிருந்து ஆர்வத்தைப் புதுப்பிக்க முயன்றாலும் அதன் கட்டுப்பாடுகள் போன்ற நடைமுறைப் பிரச்சினைகளால் பல நிறுவனங்கள் முதலீடுகளைத் திரும்பப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.