பல மாதங்களாக, ஈரான் ஆதரவு ஹூதிகள் செங்கடலில் உள்ள வணிகக் கப்பல்களைத் தாக்கி, உலகளாவிய விநியோகங்களை அச்சுறுத்தி, கப்பல்களை வேறு வழிகளில் நடத்தும்படி கட்டாயப்படுத்தி, செலவுகளை அதிகரித்து வருகின்றனர்.
காசா பகுதி மீதான இஸ்ரேலின் படையெடுப்பிற்கு பதிலளிக்கும் விதமாக இஸ்ரேலுடன் தொடர்புகளைக் கொண்ட கப்பல்களை இலக்கு வைப்பதாக ஏமனில் உள்ள போராளிகள் கூறுகின்றனர், ஆனாலும் பல இலக்குகளுக்கு இஸ்ரேலுடன் எந்த தொடர்பும் இல்லை என்று குற்றம் சாட்ட படுகின்றது.
ஹூதிகளுக்கு எதிரான பதிலடி தாக்குதல்கள் மற்றும் போராளிகளின் ட்ரோன்கள்
மற்றும் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ள
அமெரிக்கா, செங்கடலைப் பாதுகாக்க உதவும் வகையில் 20 க்கும் மேற்பட்ட
நாடுகளின் கூட்டணியை ஏற்றுள்ளது.
சீன ஆய்வாளர்கள் தங்கள் கடல்சார் உயிர்நாடி என்று அழைக்கும் பகுதியாக செங்கடல் உள்ளது”இந்த நிலையில், இவ்வாறு செங்கடலில் பல அட்டூழியங்கள் நடைபெற்று வருகின்றநிலையில் சீனா எந்த ஒரு கண்டனங்களையும் இதுவரை தெரிவிக்கவில்லை.சீனாவின் இந்த நிலைப்பாடு சற்று விநோதமாகவும் விரோதமாகவும் இருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.