Sunday, May 19, 2024
HomeLatest Newsசுகாதாரமற்ற தண்ணீரால் குழந்தைகள் பாதிப்பு! யுனிசெவ் அமைப்பு எச்சரிக்கை

சுகாதாரமற்ற தண்ணீரால் குழந்தைகள் பாதிப்பு! யுனிசெவ் அமைப்பு எச்சரிக்கை

ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் பராமரிப்பு பிரிவான யுனிசெவ் அமைப்பு ஆபிரிக்காவின் மைய நாடுகளுக்கு சுகாதாரமான தண்ணீரை பயன்படுத்துமாறும், சுகாதாரமற்ற தண்ணீரினால் குழந்தைகள் பாதிக்கப்படும் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்திருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எத்தியோப்பியா, கென்யா மற்றும் சோமாளியா போன்ற நாடுகளில் பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான தண்ணீர் கிடைக்காதவர்களின் எண்ணிக்கை 9.5 மில்லியனில் இருந்து தற்போது 16.2 மில்லியனாக அதிகரித்துள்ளதாகவும் இந்த அதிகரிப்பானது பாரிய, ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் மேற்படி தண்ணீர் பிரச்சனைக்கு உடனடி தீர்வு எட்டப்படாதவிடத்து ஆபிரிக்காவில் குழந்தைகள் இறப்பு விகிதம் அதிகரிப்பதையும், பேரழிவு ஏற்படுவதையும் தடுக்க முடியாது என “யுனிசெவ்” அமைப்பு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent News