Sunday, May 19, 2024
HomeLatest Newsநாடு கடத்தப்படவுள்ள பிரித்தானிய பெண் மாயம் – விசாரணைகள் ஆரம்பம்!

நாடு கடத்தப்படவுள்ள பிரித்தானிய பெண் மாயம் – விசாரணைகள் ஆரம்பம்!

நீதிமன்றத்தினால் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், பிரித்தானிய பெண்ணான கெய்லி பிரேசரை கண்டுபிடிக்க முடியவில்லை என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் அவரைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

தம்மை இலங்கையில் இருந்து நாடு கடத்துவதற்கு குடிவரவு குடியகல்வு திணைக்களம் எடுத்த தீர்மானத்தை ரத்து செய்ய கோரி கெய்லி பிரேசர் செய்த விண்ணப்பத்தை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

நீதிமன்ற மேன்முறையீட்டு நீதியரசர், குடியகல்வு மற்றும் குடிவரவு கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு காரணம் கூறாமல் வீசாவை நிறுத்தவோ அல்லது ரத்து செய்யவோ உரிமை உள்ளதாகவும், உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளாலும் அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

சமூக ஊடகங்களில் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டம் தொடர்பாக உள்ளடக்கத்தை வெளியிட்ட குறித்த ஸ்கொட்லாந்து சுற்றுலாப் பயணி கெய்லி ஃப்ரேசருக்கு வழங்கப்பட்ட விசாவை நிறுத்த ஆகஸ்ட் 10 ஆம் திகதி குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் முடிவு செய்தது.

ஆகஸ்ட் 15 ஆம் திகதிக்கு முன்னர் இலங்கையை விட்டு வெளியேறுமாறும் திணைக்களம் அவருக்கு அறிவித்திருந்தது.

Recent News