அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்திலுள்ள அட்லான்டா நகர சிறைச்சாலையில் உயிரிழந்த நபர் ஒருவரை “பூச்சிகளும் மூட்டைப் பூச்சிகளும் உயிரோடு உண்டு விட்டதாக ” அவரது குடும்ப வழக்கறிஞர் குற்றம் சாட்டியுள்ளார்.
லாஷான் தாம்சன் என்பவர் ஒரு சிறு குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்ட அவர் மனநலம் பாதிக்கப்பட்டவரென அதிகாரிகள் தீர்ப்பளித்த பின்னர் ஃபுல்டன் மாவட்ட சிறையின் மனநல பிரிவில் வைக்கப்பட்டுள்ளார்.
அவரது குடும்ப வழக்கறிஞரான மைக்கேல் டி ஹார்பர், தாம்சனின் உடல் முழுவதும் பூச்சிகள் ஏற்படுத்திய துளைகளை காட்டும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அவர் குற்றவியல் விசாரணைக்கு கோரிக்கை விடுத்துள்ளதோடு, வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
அத்துடன் “தாம்சன் ஒரு மோசமான சிறையில் பூச்சிகள் மற்றும் மூட்டைப் பூச்சிகளால் உயிருடன் சாப்பிடப்பட்டு உயிரிழந்துள்ளதுடன், அந்த சிறை நோயுற்ற விலங்குக்குக் கூட ஏற்றதன்று எனவும் இவ்வாறான நிலையில் அங்கு நிலையில் அவரை வைத்திருக்கக் கூடாது,” என்றும் வழக்கறிஞர் ஹார்பர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
அவர் கைது செய்யப்பட்டு 3 மாதங்களுக்குப் பிறகு சிறையில் அவர் அடைத்து வைக்கப்பட்டிருந்த அறையில் பேச்சு மூச்சின்றி கிடந்தமையால் உள்ளூர் காவல்துறை, மருத்துவப் பணியாளர்கள் ஆகியோர் அவரை உயிர்ப்பிக்க எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து அவர் இறந்து விட்டதாக அறிவித்துள்ளனர்.
அத்துடன் தாம்சனின் நிலைமை மோசமடைந்து வந்ததை தடுப்புக்காவல் அதிகாரிகளும் மருத்துவப் பணியாளர்களும் கவனித்த போதிலும் , அவருக்கு உதவிகளை வழங்க முன்வரவில்லை எனவும் சிறைப் பதிவுகள் காட்டியுள்ளன.
மருத்துவ பரிசோதகரின் அறிக்கை அவரது அறையில் “கடுமையான மூட்டைப்பூச்சிப் பரவல்” இருப்பதாகக் கூறியுள்ளதுடன், தாம்சனின் உடலில் அதிர்ச்சிக்கான தெளிவான அறிகுறிகள் எதுவுமில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.