அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் சீனாவின் டிக்டாக் ( TikTok) செயலியை
தடை செய்யும் வகையில் கொண்வரப்படவுள்ள மசோதாவானது அரசியலமைப்பிற்கு
முரணான செயல் என அமெரிக்க சிவில் விடுதலை அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
சக்தி மற்றும் வர்த்தகத்துறை இருதரப்பு முன்மொழிவுகளுக்கு வாக்களித்திருந்தது.
இதன்போது தேசிய பாதுகாப்பு விடயங்கள் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளன.
ஜனாதிபதித் தேர்தல் ஆண்டாக இது இருப்பதினால் தலைவர்கள் மலினமான அரசிலை நகர்வுகளை மேற்கொள்வதாக அமெரிக்க சிவில் விடுதலை
அமைப்பின் சிரேஸ்ட கொள்கை வகுப்பாளர் ஜின்னா லவன்டோப் சுட்டிக்காட்டினார்.