Saturday, November 16, 2024
HomeLatest Newsசீனா, ரஷ்யாவினால் ட்ரான் கொள்வனவை மீளாய்வு செய்யும் ஆஸ்திரேலியா!

சீனா, ரஷ்யாவினால் ட்ரான் கொள்வனவை மீளாய்வு செய்யும் ஆஸ்திரேலியா!

ஆஸ்திரேலியா, ஆஸ்திரிய நிறுவனமான ஷீபெல்லிடம் இருந்து s-100 camcopter ட்ரான்களைக் கொள்வனவு செய்வதற்கு திட்டமிட்டிருந்தது.

இது ஆஸ்திரேலியா பிரதமராக ஸ்காட் மோரிசன் இருந்த காலப்பகுதியில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் பீட்டர் டட்டன் இன் தலைமையில் எடுக்கப்பட்ட முடிவு என்பதால் தற்போது பிரதமர் அந்தோனி அல்பானீஸ் இந்த ட்ரான் கொள்வனவை ரத்து செய்வது தொடர்பாக கலந்துரையாடி வருகிறார்.

இதற்கு காரணம், இதே 100camcopter ட்ரான்கள் ஏற்கனவே ரஷ்யா மற்றும் சீனாவினால் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பதால் இவற்றைப் பயன்படுத்துவது ஆஸ்திரேலியா பாதுகாப்பிற்கு உகந்ததல்ல என்பதால் ஆகும்.

மேலும் தயாரிப்பு நிறுவனம் இந்த ட்ரான்களை இராணுவ ஆட்சி நடைபெறும் மயன்மாரிற்கும் விற்பனை செய்துள்ளதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. இந்த ட்ரான்களை ஆஸ்திரேலியா அதன் உளவு அல்லது கண்காணிப்பு நடவடிக்கைகளிற்குப் பயன்படுத்த தீர்மானித்திருந்தது. இந்த ஒப்பந்தம் ஏறத்தாழ 1 பில்லியன் டாலர் பெறுமதியானது எனக் குறிப்பிடப்படுகிறது.

Recent News