பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் செயற்பட்டதை போன்று தற்போதும் அமெரிக்காவின் தேவைக்காக செயற்படுகிறார்.
தற்போதைய அரசாங்கம் பிரச்சினைகளை குறிப்பிடுகிறதே தவிர நடைமுறைக்கு சாத்தியமான தீர்வினை முன்வைக்கவில்லை.
பஷில் ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்புரிமையை இரத்து செய்தமை பிறிதொரு அரசியல் நாடகம் என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரன தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நிறைவடைந்த இரண்டு வருட பதவி காலத்தில் நான்கு அரசாங்கங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.
பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை நாட்டு மக்கள் முழுமையாக புறக்கணித்துள்ளார்கள்.
பெரும்பான்மை பலம் உள்ளது என்ற காரணத்தினால் ஜனாதிபதி உட்பட அரசாங்க கூட்டணியில் அங்கம் வகித்த ஏனைய தரப்பினரது ஆலோசனைகளுக்கு மதிப்பளிக்கவில்லை.
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கருத்துகளுக்கு ஜனாதிபதி அவதானம் செலுத்தாத காரணத்தினால் அரசியல் ரீதியில் பாரிய விளைவுகளை எதிர்க்கொள்ள நேரிட்டுள்ளது.
சகல கட்சிகளையும் ஒன்றினைத்து சர்வகட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கு ஜனாதிபதி எம்முடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட நிலையில் எவருக்கும் தெரியாமல் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமித்தார்.