முதியவர் ஒருவர் 88 வயதில் நீர்சறுக்கல் விளையாட்டில் சாதனை படைப்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றமை அனைவரையும் அசர வைத்துள்ளது.
போலந்து நாட்டை சேர்ந்த 88 வயதான விண்ட்சர்ஃபர்(நீர்சறுக்கல்) விளையாட்டு வீரரான குறித்த முதியவர்
ஒருவரே அதில் சாதனை படைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
க்டினியாவைச் சேர்ந்த 88 வயதான பியோட்ர் டுடெக், 1981 ஆம் ஆண்டு முதல் விண்ட்சர்ஃபிங் செய்வதாகவும், 2000 ஆம் ஆண்டில் 86 வயதான சார்லஸ் ஜோஹன்னஸ் ருய்ஜ்டரால் முன்னர் இந்த சாதனையை படைத்துள்ளதை அறிந்து அவரது நண்பர்களாலே குறித்த நீர்சறுக்கல் சாதனைக்கு ஊக்குவிக்கப்பட்டுள்ளார்.
80 வயதில் சக விண்ட்சர்ஃபர்களால் “ஜூனியர்” என்ற புனைப்பெயரைப் பெற்ற டுடெக், சாதனையை ஆராய்ந்து, தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாவது விண்ட்சர்ஃப் செய்ய வேண்டும் என கண்டறிந்ததுடன் இந்த சாதனையை அவர் இந்த வார தொடக்கத்தில் முடித்துள்ளார்.
க்டினியாவின் மேயர், டூடெக்கிற்கு கோப்பையையும், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பரிசுப் பையையும் வழங்கி சாதனையைக் பாராட்டியுள்ளார்.
அத்தோடு தனது நீர்சறுக்கல் விளையாட்டு முயற்சியின் ஆதாரம் கின்னஸ் உலக சாதனைக்கான அதிகாரப்பூர்வ சான்றிதழுக்காக சமர்ப்பிக்கப்படுவதாகவும் டுடெக் கூறியுள்ளார்.