ஈரானிய பயங்கரவாத இயக்கமான ஹிஸ்புல்லாவுக்கு பதிலடி கொடுக்கும்வகையில்
தாக்குதலை மேற்கொண்டுள்ளது அமெரிக்க ராணுவம். திங்கள்கிழமை, ஹிஸ்புல்லா நடத்திய தாக்குதலில் அமெரிக்க பணியாளர்கள் மூவர் படுகாயமடைந்ததைத் தொடர்ந்து அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தாக்குதலுக்கு உத்தரவு பிறப்பித்தார், அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.
ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள அமெரிக்க பணியாளர்கள் மீது ஹிஸ்புல்லா மற்றும் தொடர்புடைய இயக்கங்கள் நடத்திய தொடர் தாக்குதலுக்காகவும் ஈர்பிள் விமான தளத்தில் திங்கள்கிழமை அமெரிக்க பணியாளர்கள் மீது நடந்த தாக்குதலுக்காகவும் பதிலடியாக இதனை மேற்கொள்வதாக பாதுகாப்பு செயலர் லாய்ட் ஆஸ்டின் தெரிவித்துள்ளார்.
செவ்வாய்கிழமை, ஈராக்கில் அதிகாலை 4.45-க்கு ஹிஸ்புல்லா சார்புடைய மூன்று இடங்களில் அமெரிக்க ராணுவம் குண்டுவீசியது. தாக்குதல் நடந்த 13 மணி நேரத்துக்குள் பதில் தாக்குதல் நடந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க படைகள், ஆயிரக்கணக்கில் ஈராக் மற்றும் நூற்றுக்கணக்கில் சிரியாவில்
நிலைகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேல்- ஹமாஸ் போர் விரிவடைவதை அமெரிக்கா கட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்து வருவதாகக் கூறப்படுகிறது.