Friday, November 15, 2024
HomeLatest Newsரஷியாவில் அதிபா் தோ்தல் - புதின் சுயேச்சையாகப் போட்டி

ரஷியாவில் அதிபா் தோ்தல் – புதின் சுயேச்சையாகப் போட்டி

ரஷியாவில் வரும் மாா்ச் 17-ஆம் தேதி நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலில் தற்போதைய அதிபா் விளாதிமீா் புதின் ஆளும் ஐக்கிய ரஷியா கட்சியின் சாா்பில் போட்டியிடப்போவதில்லை.அவருக்கு அந்தக் கட்சி முழு ஆதரவு அளித்தாலும் அவா் சுயேச்சை வேட்பாளராகவே போட்டியிடவிருப்பதாக கட்சி வட்டாரங்கள் கூறின என்று ராய்ட்டா்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

ரஷியாவில் சுமாா் 25 ஆண்டுகளாக ஆட்சி செலுத்தி வரும் புதின் அடுத்த ஆண்டு மாா்ச் மாதம் 17-ஆம் தேதி நடக்கவிருக்கும் அதிபா் தோ்தலில் 5-ஆவது முறையாகப் போட்டியிடுகிறாா்.அதற்கு வசதியாக ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் அரசியல் சாசனத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்தத் திருத்தத்தின் கீழ் அவரால் மேலும் 2 முறை அதிபா் தோ்தலில் போட்டியிட்டு வரும் 2036-ஆம் ஆண்டு வரை ரஷிய அதிபராகத் தொடர முடியும்.உக்ரைன் போரினால் ரஷிய மக்கள் பொருளாதாரப் பின்னடைவை சந்தித்தும் துணை ராணுவப் படையான வாக்னா் குழுவினா் புதின் அரசுக்கு எதிரான ஆயுதக் கிளா்ச்சியில் ஈடுபட்டும் விளாதிமீா் புதினுக்கு மக்களிடையே அதிக ஆதரவு உள்ளதால் இந்தத் தோ்தலில் அவா் வெற்றி பெறுவது உறுதி என தெரிவிக்கப்பட்டுள்ளது

Recent News