Friday, May 17, 2024
HomeLatest Newsசீனாவின் செல்வாக்கை தடுக்கத் திட்டம்...!மீண்டும் யுனெஸ்கோவில் இணையும் அமெரிக்கா...!

சீனாவின் செல்வாக்கை தடுக்கத் திட்டம்…!மீண்டும் யுனெஸ்கோவில் இணையும் அமெரிக்கா…!

அமெரிக்கா ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பில் மீண்டும் இணைந்து கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

யுனெஸ்கோ அமைப்பில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருவதனை தடுக்கும் நோக்கிலே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கல்வி, அறிவியல் மற்றும் கலாசார மேம்பாட்டுக்கான ஐ.நாவின் பிரிவான யுனெஸ்கோவில் பலஸ்தீனத்தை இணைப்பதற்கு கடந்த 2011 ஆம் ஆண்டு தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து, யுனெஸ்கோவுக்கு அளித்து வந்த நிதியுதவியை அமெரிக்காவும், இஸ்ரேலும் நிறுத்திவைத்தன.

அது மட்டுமன்றி, யுனெஸ்கோ தொடா்ந்து இஸ்ரேல் விரோதப் போக்கை கடைப்பிடித்து வருவதாகக் குறிப்பிட்டு அந்த அமைப்பிலிருந்து விலகுவதாக கடந்த 2017-ஆம் ஆண்டில் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு அறிவித்திருந்தது.

இவ்வாறான சூழலிலே, யுனெஸ்கோவில் மீண்டும் இணைய முடிவு செய்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் வள ஆதார மேலாண்மைப் பிரிவுக்கான இணையமைச்சா் ரிச்சா்ட் வா்மா, யுனெஸ்கோ பொது இயக்குநா் ஆவ்ட்ரே அஸூலேவிடம் சமா்ப்பித்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

தற்பொழுது, பலஸ்தீனத்தின் மேற்குக் கரை மற்றும் காஸா பகுதிகள் தனி நாடுகளாக இயங்கி வருகின்ற போதிலும் இஸ்ரேலை பலஸ்தீனமும், பலஸ்தீனத்தை இஸ்ரேலும் தனி நாடுகளாக இதுவரை அங்கீகரிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recent News