கனடாவில் உணவு விநியோகம் என்ற போர்வையில் இடம்பெற்று வரும் மோசடிச் சம்பவங்கள் தொடர்பில் பீல் பிராந்திய காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உணவு விநியோக சாரதிகள் என்ற போர்வையில் சில மோசடிகாரர்கள் மக்களை ஏமாற்றி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
போலியான உணவு விநியோக சாரதிகள், வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் பிரவேசித்து மோசடிளை செய்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மேலும், பிரபல உணவு விநியோக நிறுவனங்களின் வாகனங்களுக்கு நிகரான வாகனங்களை மோசடிகளுக்காக பயன்படுத்திக் கொள்வதாகவும் தெரியவந்துள்ளது.
பொருள் விநியோகத்திற்கு பணம் செலுத்த முடியாது எனவும் அதனால் பணத்தை பெற்றுக் கொண்டு, வங்கி அட்டைகளை ஊடாக கட்டணத்தை செலுத்த உதவுமாறும் இந்த மோசடிகாரர்கள் மக்களிடம் கோருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எனவே இந்த விடயம் தொடர்பில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.