ரஷ்ய – உக்ரைன் போரின் போது 16 இலங்கை இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும், ஓய்வுபெற்ற சிறிலங்கா இராணுவத்தினர் வெளியேறியமை தொடர்பில் 288 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரத்மித பண்டார தென்னகோன்(Pramitha Bandara Tennakoon) தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த முறைப்பாடு தொடர்பில் பாதுகாப்பு அமைச்சும் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.ரஷ்ய போரில் ஈடுபட்டுவரும் ஓய்வு பெற்ற இலங்கை இராணுவ வீரர்கள் மீது அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.இதன்போது இராஜாங்க அமைச்சரால் மனித கடத்தலில் ஈடுபடுவோர் தொடர்பில் 0112-401146 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
போருக்கான ஆட்சேர்ப்பு தொடர்பான விளம்பரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.மேலும், போரின் முன் வரிசையில் இருந்த எமது நாட்டின் இராணுவ வீரர் ஒருவரை தன்னால் தொடர்பு கொள்ள முடிந்ததாகவும், ரஷ்ய மொழியில் அவர்களுக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் சட்டப்பூர்வமானது அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.