கண்டி – அலதெனிய பிரதேசத்தில் அயல் வீட்டு நபர் மரத்தில் இருந்து கீழே விழுந்த தகவலை அவரது சகோதரருக்கு தகவல் வழங்கிய இரண்டு நாய்கள் தொடர்பில் அபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
62 வயதான அன்வர் தனது தோட்டத்தில் ஜாதிக்காய் பறித்து கொண்டிருந்த நிலையில் சிறிது நேரத்தில் மரத்திலிருந்து விழுந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து அவரது சகோதரி கூறியதாவது,
“அண்ணன் ஜாதிக்காய் பறிக்கும் இடத்திற்குச் சென்று இரண்டு முறை பார்வையிட்டேன். பின்னர் வீட்டிற்கு வந்து துணி துவைக்க ஆரம்பித்துவிட்டேன். துணி துவைக்கும் போது, பக்கத்து வீட்டு நாய்கள் இரண்டு ஜாதிக்காய் தோட்டத்தின் ஓரத்தில் இருந்து குரைக்க ஆரம்பித்தன. பன்றிகள் வந்துவிட்டன என்று நினைத்துக்கொண்டு மீண்டும் துணிகளை துவைத்தேன்.
நான் துணிகளை துவைத்துக் கொண்டிருக்கும் போது நாய் ஒன்று வந்து, தோட்டத்தைப் பார்த்து குரைக்க ஆரம்பித்துள்ளது. எனினும் நான் பெரிதாக கண்டுக்கொள்ளவில்லை. 3 முறை தோட்டத்தை நோக்கி சென்று மீண்டும் என்னிடம் வந்தது.
பின்னர் எனது ஆடையை கடித்து இழுத்தது. சந்தேகமடைந்து நான் அவ்விடத்திற்கு சென்றேன்.
அங்கு மற்ற நாய் அண்ணனை எழுப்பி விடுவதற்கு முயற்சித்து குறைத்துக் கொண்டிருந்தது. அங்கு சகோதரன் இரத்த வெள்ளத்தில் கிடந்தார். உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளிக்கப்பட்டது.
அவரை இரண்டு நாய்கள் இணைந்து காப்பாற்றிவிட்டது என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது” என சகோதரி குறிப்பிட்டுள்ளார்.