பதுளை மாவட்டம் மிகவும் மோசமான அளவு உணவு பற்றாக்குறைக்கு முகம் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அங்கு வசிப்பவர்களில் 47,665 குடும்பங்கள் கடுமையான உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாக பதுளை மாவட்டச் செயலாளர் தமயந்தி பரணகம தெரிவித்துள்ளார்.
குறித்த விடயமானது கணக்கெடுப்பு அறிக்கை ஒன்றில் வெளியாகி உள்ளதுடன் அந்த மாவட்டத்தில் 05 வயதுக்குட்பட்ட 10,873 சிறுவர்கள் போஷாக்கு குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பிரதமர் தலைமையில் பதுளை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற அளுத் கிராமக் – அளுத் கடுக் தேசிய ஒருங்கிணைந்த பங்கேற்பு மற்றும் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் மாவட்ட முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தின் போதே மாவட்ட செயலாளர் இதனைக் கூறியுள்ளார்.