உலகில் உள்ள வல்லரசு நாடுகள் தமக்கு தேவையான வளங்கள் பலவற்றை தம்மகத்தே கொண்டிருந்தாலும், மிக முக்கியமான அத்தியாவசிய தேவைகளுக்கு அங்கு பற்றாக்குறை நிலவ தான் செய்கின்றது.
அந்த வகையில் உலகின் மிகவும் பணக்கார நாடான அமெரிக்காவில் சுத்தமான குடிநீருக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அங்கு மில்லியன் கணக்கான மக்கள் போதிய அளவு சுத்தமான குடிநீரின்றி பரிதவித்து வருகின்றனர்.
அத்துடன் 2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அன்றாடப் பயன்பாட்டுக்குரிய தண்ணீர் இல்லாமல் தவித்து வருகின்றனர். வருகின்றனர்.
அத்துடன், அமெரிக்காவின் தென்மேற்கு வட்டாரம் முழுவதும் கடுமையான வறட்சி நீடிப்பதால், பாதிக்கப்படக் கூடிய நிலையில் உள்ள மக்கள் மென்மேலும் சிரமங்களை எதிர்நோக்கக்கூடும் என்றும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.