உக்ரைனில் உள்ள வைத்தியசாலை ஒன்று ரஷ்யாவின் தாக்குதலினால் தரைமட்டமான நிலையில் அங்கு இடிபாடுகளிற்குள் சிக்கிய கர்ப்பிணிப் பெண்யொருவரை மீட்பு பணியாளர்கள் மீட்பதனை காட்டும் அசோசியேட்டட் பிரசின் புகைப்படம் சர்வதேச விருதை தட்டி சென்றுள்ளது.
குறித்த கர்ப்பிணியின் புகைப்படமானது 2022 ஆம் ஆண்டு மார்ச் ஒன்பதாம் திகதி கடும் காயங்களிற்குள்ளான பெண் அவரது இடது கையினை வயிற்றில் வைத்தபடி படுத்திருப்பதை காட்டும் வகையிலான படத்தினை ஏபி புகைப்படப்பிடிப்பாளரான எவ்ஜெனி மலோலெட்கா எடுத்துள்ளார்.
உக்ரைனின் கிழக்கு பகுதி துறைமுகநகரான மரியபோலில் பதிவு செய்யப்பட்ட குறித்த படம் ரஷ்ய யுத்தத்தின் கொடுமையை வெளிப்படுத்துவதாக உள்ளது.
அத்துடன் அந்த பெண்மணி உயிரற்ற தனது குழந்தையை பிரசவித்த பின்னர் உயிரிழந்துள்ளார்.
இது நான் மறக்க விரும்புகின்ற தருணம் ஆனால் என்னால் மறக்க முடியவில்லை என மலோலெட்கா, அதற்கான விருது குறித்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்னர் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.
அத்துடன் எவ்ஜெனி மலோலெட்கா குறித்த புகைப்படத்தினை வெளியிடா விடில் ரஸ்ய யுத்தத்தின் தாக்கத்தின் உணர்ந்திருக்க முடியாது எனவும் கூறப்பட்டுள்ளது.
ஒரு படம் உலகின் கூட்டு நினைவாக மாறுவது அபூர்வம் என்பதுடன் மிகவும் தீர்க்கமான ஒரு தருணத்தை பதிவு செய்தமையால் எவ்ஜெனி மலோலெட்கா ஊடகபடப்பிடிப்பின் உயர்தராதாரத்தை தொடர்ந்துள்ளார் எனவும் ஏபியின் புகைப்பட இயக்குநர் டேவிட்அகே கூறியுள்ளார்.