மதுப் பழக்கத்திற்கு அடிமையாகிய நாய் ஒன்று சிகிச்சை பெற்றுக்கொண்ட சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இச்சம்பவம் பிரித்தானியாவின் – பிளைமவுத்தில் இடம்பெற்றுள்ளது. அங்குள்ள கோகோ என்ற நாயானது மதுவுக்கு அடிமையாகியுள்ளது.
வெறும் இரண்டு வயதே ஆகும் கோகோக்கு அதன் உரிமையாளர் தூங்குவதற்கு முன் நாய்க்கு மதுபானத்தை கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்நிலையில், உரிமையாளர் உயிரிழந்த பின்னர் கோகோ மதுவுக்கு அடிமையாகியிருப்பதை கால்நடை மருத்துவர் கண்டுபிடிக்கப்பட்டதுள்ளனர்.
இதனால், விலங்கு நல அறக்கட்டளைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோகோவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதுடன் உடல்நிலை சரியாக பாதிக்கப்பட்டதால் , 24 மணி நேரமும் முழு கவனிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
நோய் தொற்றின் அபாயத்தை குறைக்கும் நோக்கில், கோகோவிற்கு நான்கு வாரங்கள் சிகிச்சை அளித்துள்ளனர்.
எவ்வாறாயினும், தற்போது கோகோவிற்கான சிகிச்சைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இப்போது ஒரு சாதாரண நாயைப் போல நடந்து கொள்வதாகவும் மருத்துவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.