பாக்கிஸ்தானில் கடந்த சில வாரங்களாக பல்வேறு மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்களில் பெய்து வரும் கடுமையான மழை மற்றும் வெள்ளம் காரணமாக சுமார் 33 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக காலநிலை மாற்றங்களுக்கான அமைச்சர் “ஷெரி ரஹ்மான்” தெரிவித்திருக்கின்றார்.
மேலும் கடந்த சில வாரங்களில் ஏற்பட்ட இயற்கை அனார்த்தங்களினால் சுமார் 1,000 ற்கும் மேற்பட்டோர் இறந்திருப்பதாகவும் அதிக எண்ணிக்கையிலானோர் பல்வேறு நோய்த் தொற்றுக்களுடன் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் பாக்கிஸ்தான் செய்திகள் தெரிவிக்கின்றன.
மேற்படி காலநிலை கோளாறுகளினால் பாதிக்கப்பட்ட மக்களின் பொருளாதாரம் பாரிய அளவில் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர்களை பொருளாதார சரிவில் இருந்து மீட்பதற்கு இன்னும் சிறிய காலம் தேவைப்படும் எனவும் தெரிவித்திருக்கின்றார்.
மேலும் ஏற்பட்ட வெள்ள அழிவினால் அரச நிர்வாக கட்டங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் பிரதான போக்குவரத்துப் பாலங்கள் என்பன சேதமடைந்திருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்திருக்கின்றார்.