Wednesday, November 20, 2024
HomeLatest Newsவெள்ளிக்கிழமை விடுமுறை வேண்டாம்- சட்டத்தரணிகள் சங்கம்!

வெள்ளிக்கிழமை விடுமுறை வேண்டாம்- சட்டத்தரணிகள் சங்கம்!

நீதித்துறை மற்றும் நீதித்துறை ஆணைக்குழுவின் கடமைகள் வெள்ளிக்கிழமைகளில் வழமையான முறையில் இடம்பெறுவதை உறுதிப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை சட்டத்தரணிகள் கோரிக்கை முன்வைத்துள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் பிரதம நீதியரசர் மற்றும் நீதிச்சேவை ஆணைக்குழுவிடம் எழுத்து மூலம் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளது.

அரசாங்கத்தின் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து நிறுவனங்களுக்கும் வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் மற்றும் அதன் செயலாளர் இசுரு பாலபடபெந்தி ஆகியோர் கடிதம் மூலம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளனர்

அத்துடன் நீதிமன்ற நடவடிக்கைகள் செல்லுபடியாகாத அத்தியாவசிய சேவைகளின் பட்டியலில் உள்ளடக்கப்படவில்லை எனவும் சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

நீதித்துறை சேவை அத்தியாவசியமான சேவைக்கு உட்பட்டதுடன் வெள்ளிக்கிழமைகளில் சேவை நிறுத்தப்படும் பட்சத்தில் பொது மக்களுக்கு சட்ட வல்லுநர்கள் அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிடும் எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Recent News