Tuesday, November 19, 2024
HomeLatest Newsகோட்டாவுக்கு மோடி அழுத்தம் கொடுத்ததாக எழுந்த சர்ச்சை – அதிருப்தியில் அதானி குழுமம்!

கோட்டாவுக்கு மோடி அழுத்தம் கொடுத்ததாக எழுந்த சர்ச்சை – அதிருப்தியில் அதானி குழுமம்!

பிரதமர் நரேந்திர மோடியின் அழுத்தத்தின் பேரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச செயற்பட்டதாக, இலங்கை அதிகாரி ஒருவர் கூறியதை அடுத்து, இலங்கையின் எரிசக்தி திட்டம் தொடர்பான சர்ச்சை தொடர்பில் தாம் அதிருப்தி அடைந்துள்ளதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் முதலீடு செய்வதில் தமது நோக்கம் மதிப்புமிக்க அண்டை நாடுகளின் தேவைகளை நிவர்த்தி செய்வதாகும் என்று அதானி குழுமம் குறிப்பிட்டுள்ளது.

எனினும் தற்போது எழுப்பப்பட்டுள்ள சர்ச்சைக் காரணமாக தாம் ஏமாற்றமடந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அதானி குழுமம், இந்த பிரச்சினை ஏற்கனவே இலங்கை அரசாங்கத்தால் தீர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

காற்றாலை மின் திட்டத்தை நேரடியாக அதானி குழுமத்திற்கு வழங்குமாறு பிரதமர் மோடி தனக்கு அழுத்தம் கொடுத்ததாக ஜனாதிபதி ராஜபக்ஷ தெரிவித்ததாக நாடாளுமன்றக் குழு முன் கூறிய, இலங்கை இலங்கை மின்சார சபையின் முன்னாள் தலைவர் எம்.எம்.சி. பெர்டினாண்டோ, மூன்று நாட்களுக்குள் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

அவரின் கூற்றை ஜனாதிபதி ராஜபக்ச உறுதியாக மறுத்தமையை அடுத்தே, அவர் பதவி விலகியுள்ளார்.

Recent News