உலகில் தற்போது மற்றுமொரு புதிய வகை நோயாக இனம் காணப்பட்டு வருகின்ற குரங்கு அம்மை எனப்படும் பாலியல் மூலம் பரவலடையும் சின்னம்மை நோயின் இனத்தை ஒத்த குரங்கம்மை எனப்படும் தொற்று நோய் தற்போது ஆயிரம் என்ற எண்ணிக்கையை தொட்டுள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
ஒன்பது ஆபிரிக்க நாடுகள் உட்பட 29 நாடுகளில் தீவிர பரவல் நிலையை கொண்டுள்ள இந்நோய் தற்போது 1000 என்ற எண்ணிக்கையை எட்டியுள்ளதாகவும் தற்போதைய நிலையில் இந்நோய் வேகமாக பரவும் ஒரு தொற்று நோயாக காணப்படுவதாகவும், கொரோனா நோயைப் போன்று திரிவுபடும் ஒரு நிலையினையும் இந்நோய் கொண்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
வெறும் மூன்று வாரங்களின் நிறைவில் 1000 தொற்றாளர்கள் என்பது மேலும் அதிகமாக தொற்றாளர்களை கொண்டிருக்கலாம் என்றும் அச்சம் தெரிவிக்கப்படுகின்றது.