நாட்டில் கடந்த சில மாதங்களாக கடுமையான பொருளாதார நெருக்கடி நிலை தீவிரமடைந்து வருகின்றது.
இவ்வாறான நிலையில் நாட்டில் அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றி தொடர்ச்சியாக முன்னெடுத்து செல்லும் வகையில், தேவையான நிதியைப் பெற்றுக்கொள்வதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 69,500 கோடி ரூபா குறைநிரப்பு பிரேரணைக்கு அரசாங்க நிதி தொடர்பான குழு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாராளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா தலைமையில், நேற்றையதினம் அரசாங்க நிதி குழுவின் கூட்டத்திலேயே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நிலைமை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சமூகத்தின் பல்வேறு தரப்பினருக்கும் நிவாரணம் வழங்குவதற்கும் பணவீக்கத்தின் காரணமாக அதிகரித்த வழங்கல் செலவினத்தினை ஈடுசெய்வதற்கான ஒதுக்கீடுகளைச் செய்வதற்கும் இந்தக் குறைநிரப்பு பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
குறைநிரப்பு பிரேரணைக்கான 69500 கோடி ரூபாவில் 39500 கோடி ரூபா மீண்டுவரும் செலவினங்களுக்கும், 30000 கோடி ரூபா மூலதனச் செலவினமாகவும் மதிப்பிடப்பட்டுள்ளன.
நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவினால் குறைநிரப்பு மதிப்பீட்டின் மூலம் நிதி ஒதுக்கப்படவுள்ள முறைமை குறித்து குழுவுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
அதேவேளை, உலக வங்கி மற்றும் இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிதியுதவி தவிர ஏனைய தொகையான 305,000 மில்லியன் ரூபாவுக்கு உள்நாட்டு நிதியளிப்புக்கான தேவை இருப்பதாகவும் இங்கு புலப்படுத்தப்பட்டது.
695 00 கோடி ரூபா மதிப்பீடு செய்யப்பட்டுள்ளபோதும் அத்தியாவசிய செலவினங்கள் தவிர,ஏனைய சகல செலவினங்களையும் குறைத்து 300 00கோடி ரூபாவுக்கும் மேலதிகமான தொகையை சேமிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் நிதி அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிற செய்திகள்
கொழும்பு அரசியலில் திடீர் திருப்பம்; பதவியை தூக்கியெறியும் பசில்!
மாயமான முல்லைத்தீவு சிறுமி ஹட்டனில் கண்டுபிடிப்பு!
கொழும்பு- யாழ் அதிவேக புகையிரத சேவை;பந்துல நடவடிக்கை!
இலங்கை அகதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் தீவிரம்;மேலும் 4 பேர் போராட்டத்தில் இணைவு!
உக்ரைனின் அதிரடித் தாக்குதலால் உயர்மட்ட இராணுவத்தளபதியை இழந்த ரஷ்யா!