நாட்டில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கடும் மழை காரணமாக இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதுகாப்பு கருதி உறவினர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் இரத்தினபுரி மாவட்டத்திலேயே அதிக பாதிப்புக்கள் பதிவாகியுள்ளன.
இம்மாவட்டத்தில் 13 பிரதேச செயலகப் பிரிவுகளில் 585 குடும்பங்களைச் சேர்ந்த 2290 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
வெள்ள எச்சரிக்கை காரணமாக 7 குடும்பங்களைச் சேர்ந்த 25 பேர் 3 தற்காலிக முகாம்களிலும், 373 குடும்பங்களைச் சேர்ந்த 1362 பேர் உறவினர்களது வீடுகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
களுத்துறை மாவட்டத்தில் வெள்ளம் மற்றும் பலத்த காற்றினால் 16 குடும்பங்களைச் சேர்ந்த 62 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் 82 வீடுகள் இயற்கை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.