Tuesday, December 24, 2024
HomeLatest Newsநாட்டு மக்களுக்கு இன்று முதல் 4ஆவது தடுப்பூசி

நாட்டு மக்களுக்கு இன்று முதல் 4ஆவது தடுப்பூசி

இலங்கை மக்களுக்கு இன்று திங்கட்கிழமை முதல் 4ஆவது தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.

முதற்கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நான்காம் கட்ட தடுப்பூசியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன அண்மையில் தெரிவித்திருந்தார்.

சுகாதார அமைச்சின் கொரோனா தொடர்பான நிபுணர் குழுவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

அதற்கமைய இன்றைய தினம் முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

Recent News