Friday, January 10, 2025
HomeLatest Newsஅவசரகால நிலை பிரகடனம் – நோர்வே தூதுவர் கவலை!

அவசரகால நிலை பிரகடனம் – நோர்வே தூதுவர் கவலை!

அமைதியான போராட்டக்காரர்களுக்கு எதிராக கண்ணீர் புகை பிரயோகம் மற்றும் அமைதியான போராட்டத்தின் போது அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டமை குறித்து கவலையடைவதாக இலங்கைக்கான நோர்வே தூதுவர் Trine Jøranli Eskedal தனது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும், அனைத்து தரப்பினரும் நிதானத்தை கடைப்பிடிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஏற்கனவே அமெரிக்கா உட்பட பல நாடுகள் அவசரகால நிலை பிரகடனம் தொடர்பில் தமது கண்டனத்தை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent News