Saturday, January 11, 2025
HomeLatest Newsநம்பிக்கையில்லா பிரேரணைக்கு சுயாதீன எம்.பிக்கள் ஆதரவளிக்க தீர்மானம்

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு சுயாதீன எம்.பிக்கள் ஆதரவளிக்க தீர்மானம்

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினால் நாடாளுமன்றில் முன்வைக்கப்படும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்க ஸ்ரீ லங்கா சுதந்திக்கட்சி தலைமையிலான சுயாதீன எம்.பிக்கள் குழு தீர்மானித்துள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர இன்று தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 10 கட்சிகளைச் சேர்ந்த சுமார் 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recent News