Wednesday, January 15, 2025
HomeLatest Newsஅந்நியச் செலாவணியை அதிகரிக்க அரசாங்கம் எடுத்த நடவடிக்கை!

அந்நியச் செலாவணியை அதிகரிக்க அரசாங்கம் எடுத்த நடவடிக்கை!

இலங்கைக்கும் தாய்லாந்தின் பெங்கொங் நகருக்குமிடையில் நேரடி விமான சேவைகளை ஆரம்பிப்பதற்கு ‘தாய் ஸ்மைல்’ (Thai Smile) விமான சேவை நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து பெங்கொங் நகருக்கு வாராந்தம் 7 நாட்களுக்கு விமான பயணங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இலங்கைக்கான தாய்லாந்து தூதுவர் போஜ் ஹான் போல் தலைமையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்காக ஏ 320 ரக விமானங்கள் பயன்படுத்தப்படுமெனவும் கூறப்படுகின்றது. அதேசமயம் , இதன் ஊடாக சுற்றுலாத்துறை வளர்ச்சியடைந்து அந்நியசெலாவணி அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.

Recent News