Thursday, January 16, 2025
HomeLatest Newsநாட்டு மக்களுக்கு பொலிஸார் இன்று விடுத்த எச்சரிக்கை 

நாட்டு மக்களுக்கு பொலிஸார் இன்று விடுத்த எச்சரிக்கை 

ஹர்த்தாலில் ஈடுபடுமாறு மக்களை வற்புறுத்துபவர்கள் மீது குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அரசியலமைப்பில் உறுதி செய்துள்ள பல்வேறு உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை அனுபவிக்கும் மக்களின் உரிமையை பொலிசார் மதித்து நடப்பதாகவும், அவர்களுக்கு எந்த இடையூறும் ஏற்படப் போவதில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளது.

ஹர்த்தாலில் பங்கேற்குமாறு பல்வேறு வர்த்தகர்கள் மற்றும் தனிநபர்களுக்கு சில குழுக்கள் அழுத்தம் கொடுப்பதாக தெரியவந்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

Recent News