நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்று வரும் போராட்டங்களை தடுக்கும் நோக்கில் முகக்கவச பயன்பாடு நீக்கப்படவில்லை என புதிய சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
போராட்டங்களை கட்டுப்படுத்தும் நோக்கில், முகக் கவசங்களை அணிவது கட்டாயமில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது என்ற வகையில் சமூக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த செய்திகளில் எவ்வித உண்மையும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கோவிட் தொற்று பரவுகை அதிகரித்துள்ளதாக கூறி அதன் ஊடாக நாட்டை முடக்கி, போராட்டங்களை தடுக்க முயற்சிக்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
எனினும் மருத்துவ தொழிநுட்பக் குழுவினரால், முகக் கவசம் அணிவது கட்டாயமில்லை என பரிந்துரை செய்யப்பட்டது.
அவர்களில் சிலர் காலிமுகத்திடல் போராட்டத்தில் இணைந்து கொண்டுள்ளனர். மேலும் சில சுகாதார வழிகாட்டல்கள் தொடர்பிலும் தொழிநுட்ப நிபுணர் குழுவினர் பரிந்துரைகளை செய்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.