நாட்டில் தற்போது நிலவிவரும் நெருக்கடி நிலைக்கு மத்தியில் சற்றுமுன் புதிய அமைச்சரவை நியமனம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
குறித்த பதவியேற்பில் பொதுஜன பெரமுனவின் 11 புது முகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் – 20 ஐ ஆதரித்த நஷீருக்கும் அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆளுங்கட்சியில் 5 இற்கும் மேற்பட்ட பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகித்தபோதும் இன்று நியமிக்கப்பட்ட அமைச்சரவையில் பெண் பிரதிநிதித்துவம் அற்றதாக காணப்படுகின்றது.
மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சு சேர்க்கப்படவில்லை.
அத்துடன் முந்தைய அமைச்சரவையில் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை அமைச்சர் பதவியில் சேர்த்திருந்தார்.
பெண் பாராளுமன்ற உறுப்பினர்களான பவித்ராதேவி வன்னியாராச்சி, கலாநிதி சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே, கலாநிதி சீதா அரம்பேபொல, கீதா குமாரசிங்க, கோகிலா குணவர்தன, முதித பிரிஷாந்தி, ராஜிகா விக்கிரமசிங்க, மஞ்சுளா திஸாநாயக்க, மற்றும் டயானா கமகே ஆகியோர் ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.
பாராளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சி, முன்னாள் அமைச்சரவையின் கீழ் சுகாதாரம், எரிசக்தி மற்றும் போக்குவரத்து ஆகிய அமைச்சுப் பதவிகளை வகித்த SLPP யின் ஒரே பெண் பாராளுமன்ற உறுப்பினர் ஆவார்.
நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியைச் சேர்ந்த பல பெண் எம்.பி.க்கள் இருந்தும், புதிய அமைச்சரவையின் கீழ் அவர்களுக்கு அமைச்சர் பதவியை வகிக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.