Friday, May 16, 2025
HomeLatest Newsயாழ் சிறைச்சாலையிலிருந்து 7 கைதிகள் விடுதலை

யாழ் சிறைச்சாலையிலிருந்து 7 கைதிகள் விடுதலை

யாழ் சிறைச்சாலையிருந்து 7 கைதிகள் இன்று காலை விடுதலை செய்யப்பட்டுள்ளனர் .பொசன் போயா தினத்தை முன்னிட்டு இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.சிறு குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட கைதிகளே இவ்வாறு இன்று விடுதலை செய்யப்பாடுள்ளனர்.

மேலும் பொசன் போயாவை முன்னிட்டு நாடு முழுவதும் 173 சிறை கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவின் பரிந்துரையின் பேரில் இந்த கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.

Recent News