இலங்கையர்களில் 66 சதவீதம் பேர் தினசரி உண்ணும் உணவின் எண்ணிக்கையை குறைத்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.
உலக உணவுத் திட்டம் ஏப்ரல் மாதம் ஒரு கூட்டு விரைவான உணவு பாதுகாப்பு மதிப்பீட்டை நடத்தியது. இது 17 மாவட்டங்களில் உள்ள ஏழ்மையான குடும்பங்களை ஆய்வு செய்தது.
இதன்போது, 86 சதவீதம் பேர் மலிவான உணவுகளையும் குறைவான சத்துள்ள உணவை 95 சதவீதம் பேர் வாங்குவது ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதேநேரம், 66 சதவீதம் பேர் தினசரி உண்ணும் உணவின் எண்ணிக்கையை குறைத்துள்ளமை இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.
1948 இல் சுதந்திரம் பெற்ற பின்னர் இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
உணவுத் தட்டுப்பாடு மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்வு போன்றவற்றால் மக்கள் தங்கள் அன்றாட உணவு மற்றும் ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்ய போராடுகின்றனர்.
இலங்கையில் உணவுப் பணவீக்கம் 57 சதவீதமாக உள்ளது. இது உலகளாவிய உணவுப் பொருட்களின் விலை உயர்வு, வெளிநாட்டு கையிருப்பு குறைவு, சாதகமற்ற மாற்று விகிதங்கள் மற்றும் குறைந்த உள்நாட்டு உணவு உற்பத்தி ஆகியவற்றால் ஏற்பட்டுள்ளது.