Friday, May 17, 2024
HomeLatest Newsதைவான் எல்லைக்குள் பறந்த 24 போர் விமானங்கள்..!தொடரும் பதற்றம்..!

தைவான் எல்லைக்குள் பறந்த 24 போர் விமானங்கள்..!தொடரும் பதற்றம்..!

தைவான் எல்லைக்குள் அத்து மீறி சீனாவின் 24 போர் விமானங்கள் பறந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

2 ஆம் உலக போரின் போது சீனாவில் இருந்து தைவான் தனியாக பிரிந்தமையால்
நீண்டகாலமாக சீனாவுக்கும், தைவானுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகின்றது.

இருப்பினும், தைவானை மீண்டும் தன்னுடன் இணைக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டு வருவதுடன் ஏனைய நாடுகளுடன் தைவான் வைத்திருக்கும் நட்புறவையும் சீனா கண்டித்து வருகின்றது.

அது மட்டுமன்றி, சீனா தைவானை சுற்றி தனது இராணுவத்தினரை குவித்து போர் பயிற்சியிலும், அவ்வப்போது தைவான் நாட்டு எல்லைக்கு போர் விமானங்கள் மற்றும் போர் கப்பல்களை அனுப்பி மிரட்டலும் விடுத்து வருகின்றது.

இவ்வாறான ஒரு சூழலில், நேற்றைய தினம் சீனாவின் ஜே-10, ஜே-11, ஜே-16 போன்ற ரக விமானங்கள் மற்றும் குண்டு வீசும் விமானங்கள் உட்பட 24 போர் விமானங்கள் தைவான் எல்லைக்குள் அத்து மீறி பறந்ததாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனால் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் சீன விமானங்களை தைவான் தனது போர் கப்பல்கள் மற்றும் நிலத்தில் இருந்து ஏவக்கூடிய ஏவுகணைகள் மூலம் கண்காணிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent News