போலி 5, 000 ரூபாய் நாணய தாள்களை வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்தபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அலவத்துகொட நகரில் போலி நாணய தாளினை அச்சிட்ட புகைப்படக் கூடம் ஒன்றினை சுற்றிவளைத்து 43 போலி 5000 நாணயத் தாள்கள் மற்றும் அவற்றை அச்சிடப் பயன்படுத்திய கணினி உபகரணங்களை கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த பண்டிகைக் காலத்தில் பொருட்களை வாங்கிய பின்னர் 5000 ரூபாய் தாள்களை மாற்றிய கொண்டிருந்த நபர் தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த நபரை சோதனையிட்ட போது அவரிடமிருந்து 40 ஐந்தாயிரம் ரூபாய் தாள்கள் மீட்கப்பட்டுள்ளன.
அதை தொடர்ந்து குறித்த போலி 5000 ரூபா நாணயத் தாள்களை கணினி மூலம் அச்சடித்த நபரையும் அவ்வாறு அச்சடித்த பணங்களை உண்மையான பணமாக மாற்றுவதற்கு விளைந்த தரகரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை கைது இன்றைய தினம் ( 20) கண்டி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தபட உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.