Friday, November 15, 2024

துருக்கி நாட்டின் பெயர் மாற்றம்

‘ துருக்கி ’ தமது நாட்டின் பெயரை துருக்கியே ’ என மாற்றியுள்ளது .

துருக்கி விடுத்த கோரிக் கைக்கு அமைய ஐக்கிய நாடுகள் சபை ‘ துருக்கி ‘ குடியரசின் பெயரை ‘ துருக்கியே ‘ என அதிகார பூர்வமாக மாற்றியுள்ளது .

துருக்கிய வெளியுறவு அமைச்சர் கடந்த வாரம் ஐ.நா. பொதுச் செயலாளர் அன்போனி குட்டரெஸூக்கு இதுகுறித்து கடிதம் ஒன்றை அனுப்பிவைத்தார் .

அதில் ‘ துருக்கி ‘ என்பதற்குப் பதிலாக ‘ துருக்கியே என அனைத்து விவகாரங்களிலும் பயன்படுத்துங் கள் . ‘

‘வான்கோழி ‘ என்று பொருள்படும் ஆங்கிலவார்த்தையில் தங்களது நாடு அழைக்கப்படுவதை விரும்பாத துருக்கி , தங்கள் நாட்டின் பெயரைத் தங்களது மொழி உச்சரிப்பிலேயே உலகம் அழைக்க வேண்டுமென்று விரும்புகிறது என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது .

அத்துடன் துருக்கிய மக்களின் கலாசாரம் , நாகரிகம் மற்றும் மதிப்புகளின் சிறந்த பிரதி நிதித்துவம் மற்றும் வெளிப்பாடாக துருக்கியே உள்ளது எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி ரிசெப் தையிப் எர்டோகான் தெரிவித்துள்ளார்.

Latest Videos