இலங்கையில் தமிழர்களின் தொன்மையை வெளிப்படுத்தி நிற்கும் தமிழ் ஆலயங்கள் இனவாதம் என்ற போர்வையில் தாக்கப்பட்டும் , பேரினவாதிகளின் அடையாளங்கள் என கூறப்பட்டும் வருகின்ற சூழலில் புலம்பெயர் நாடுகளிலும் தமிழ் ஆலயங்கள் தாக்குதல்களிற்கு இலக்காகி வருகின்றன.
அந்த வகையில் ஜேர்மன் கைல்புறோன் நகரில் அருள்பலிக்கின்ற இருக்கும் ஆலயத்தின் ஜன்னல்கள் உடைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மிக நேர்த்தியான நிர்வாக கட்டமைப்பை கொண்டு இயங்கி வருகின்ற குறித்த ஆலயமானது மாலைநேர வகுப்புகளை நடத்தி வருகின்றது.
அது மட்டுமன்றி உதவி தேவைப்படுகின்ற மக்களிற்கு பல வாழ்வாதார உதவிகளையும் செய்து வருகின்றது.
இவ்வாறான சூழலில், குறித்த ஆலயத்தில் தமிழ் மொழியில் பூசை வழிபாடுகள் செய்வதற்கும் ஏகமனதாக ஒப்புக்கொண்டுள்ளனர்.
இருப்பினும் சிலர் இந்த ஆலயத்தின் பூஜை வழிபாடுகள் தொடர்பில் குழப்பத்தை உருவாக்கியுள்ளனர்.
இவ்வாறாக பூஜை வழிபாடுகள் குறித்து குழப்பங்களை உருவாக்கியுள்ள சூழலில், நாகரீமற்றமுறையில் ஆலய ஜன்னல்கள் உடைக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் தமிழர்களின் தாயகப் பகுதியில் பௌத்தமயமாக்கல் நடவடிக்கைகள் தமிழரின் தொன்மைகளை ஒரு பக்கமாக அழித்து வருவதுடன், புலம்பெயர் நாடுகளிலும் தமிழர்களின் பண்பாட்டம்சங்கள் புதைக்கப்பட்டு வருகின்றன்றமை கவலைக்குரியதே.