Friday, November 1, 2024
HomeLatest Newsஉணவுப் பணவீக்க பட்டியலில் பின்தள்ளப்பட்ட இலங்கை!

உணவுப் பணவீக்க பட்டியலில் பின்தள்ளப்பட்ட இலங்கை!

உணவுப் பணவீக்கம் அதிகம் உள்ள நாடுகளில் இலங்கை 10 வது இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இலங்கையில் உணவுப் பணவீக்கமானது 54 சதவீதமாக பதிவாகியுள்ளது.

உலக வங்கியின் சமீபத்திய தரவுகளின்படி, உணவுப் பணவீக்கம் அதிகம் உள்ள நாடுகளில் இலங்கை 10 வது இடத்தினை பிடித்துள்ளது.

அந்த அடிப்படையில், இதற்கு முன்னர் 9 வது இடத்தில் இருந்த இலங்கையானது , இந்த முறை 10 வது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட்ட உலக வங்கி தரவுகளில் அதிக உணவுப் பணவீக்கம் உள்ள நாடுகளில் இலங்கை 5 வது இடத்தைப் பிடித்திருந்ததுடன், பின்னர் படிப்படியாக கடந்த சில மாதங்களில் தரவுகளில் கீழ்நிலைக்கு சென்றுள்ளது.

உரத் தட்டுப்பாடு மற்றும் உணவு இறக்குமதிக்கான போதிய அந்நியச் செலாவணி இலங்கையில் உணவுப் பணவீக்கத்தை நேரடியாகப் பாதித்துள்ளது.

உணவுப் பணவீக்கம் அதிகம் உள்ள நாடுகளில் லெபனான் முதலிடத்திலும், சிம்பாவே மற்றும் ஆர்ஜன்டினா இரண்டாவது இடத்திலும் காணப்படுகிறது.

மேலும், இலங்கையில் உணவுப் பணவீக்கம் 54 சதவீதமாக பதிவாகியுள்ள நிலையில், லெபனானில் 139 சதவீதமாகவும், சிம்பாவேயில் 138 சதவீதமாகவும், ஆர்ஜன்டினாவில் 103 சதவீதமாகவும் பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Recent News